உள்நாட்டு செய்திகள்

பொசொன் தினத்தினை முன்னிட்டு சில பாடசாலைகளுக்கு இன்று(12) முதல் விடுமுறை



(FASTNEWS | COLOMBO) – அநுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரி மலை பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் இன்று(12) முதல் எதிர்வரும்18 ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பொசொன் நோன்மதி வைபவத்தை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு கடமைகளுக்காக வெளி இடங்களில் இருந்து அநுராதபுரத்திற்கு வரும் பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினருக்கு தங்குமிட வசதிகள் வழங்குவதற்காக குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக அநுராதபுர கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் மூடப்படவுள்ளன. இந்த பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

குருநாகல் முஸ்லிம் மையவாடியை மாநகர அவிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுவீகரிக்கும் முயற்சிக்கு மக்கள் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு.

wpengine

ஹஜ் கடமைக்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடல்

wpengine

இன்று முதல் தேசிய அடையாள அட்டையில் மாற்றம்…

wpengine