உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – ஹட்டன் (A-7) வீதியின் போக்குவரத்து மட்டு



(FASTNEWS|COLOMBO) – யட்டியாந்தோட்டை பிள்ளையார் கோயிலுக்கு அருகில் உள்ள வீதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதால் கொழும்பு – ஹட்டன் ஏ-7 வீதியின் போக்குவரத்து நடவடிக்கை இன்று(11) முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனவே அந்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மாற்று வீதியாக பழைய கொழும்பு – ஹட்டன் வீதியின் ஊடாக யட்டியாந்தோட்டை நகரின் மணிகூண்டு கோபுரத்திற்கு அருகில் மற்றும் விகாரைக்கு அருகில் சமன் சிலை வரையும் பயணித்து பிரதான வீதிக்குள் நுழைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாழிறக்கம் ஏற்பட்டுள்ள பகுதியில் சீரமைக்கு பணிகள் மேற்கொள்வதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை…

wpengine

மே முதலாம் திகதி அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கு இலவசம்..

wpengine

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மூன்று வான்கதவுகள் திறப்பு…

wpengine