உள்நாட்டு செய்திகள்

இந்தியப் பிரதமர் மோடி எதிர்வரும் 09ம் திகதி இலங்கைக்கு விஜயம்



(FASTNEWS|COLOMBO) – இந்தியப் பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட நரேந்திர மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் எதிர்வரும் 09 ஆம் திகதி இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் 09ம் திகதி பகல் இலங்கைக்கு வரும் இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி செயலகத்தில் பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து இடம்பெறும் பேச்சுவார்த்தையில் இந்திய – இலங்கை விவகாரங்கள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இலங்கையின் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து தீவிரவாத எதிர்ப்பு செயற்பாடுகள் தொடர்பாகவும் பேசப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

´மக்களின் மகிமை´ ஆர்ப்பாட்ட பேரணி மதியம் 12 மணிக்கு…

wpengine

“கட்சி மாறாமல் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவேன்”..!

wpengine

இவ்வருட இறுதிக்குள் ‘எட்கா’ கைச்சாத்திடப்படும், பிரதமர் தெரிவிப்பு.

wpengine