உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு



(FASTNEWS|COLOMBO) கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் 160 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டிற்கான அலுவலகம் அறிவித்துள்ளது.

உயிரிழந்த 162 பேரின் குடும்பத்தினருக்காக 138 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருப்பதுடன், எஞ்சிய தொகை காயமடைந்த 193 பேருக்காக வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், சேதமடைந்த கத்தோலிக்க தேவாலயங்களை மறுசீரமைக்க அரசாங்கம் 25 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இலங்கைக்கு எதிரான 2–வது டெஸ்ட் – காயத்தால் வகாப் ரியாஸ் விலகல்

wpengine

லிட்டோ நிறுவனம் நீதிமன்றில் விளக்கம்

wpengine

ஹர்ஷ – திலும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

wpengine