உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முற்பட்டவர்கள் கைது



(FASTNEWS|COLOMBO) – சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு குடிபெயர முயற்சித்த 41 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு தெற்கு ஆழ் கடற் பரப்பில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கைது செய்யப்பட்டவர்களில் 35 ஆண்களும் 06 பெண்களும் உள்ளடங்குவதுடன், 18 இற்கும் 50 இற்கும் இடைப்பட்ட வயதினரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் வைத்திய பரிசோதனையின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

91 பேரைக் கொன்ற புலி பயங்கரவாதிக்கு மன்னிப்பபு வழங்கியது போன்று, இராணுவ வீரர்களுக்கும் மன்னிப்பு வழங்குக – நாமல்..!

wpengine

இனிப்புப் பண்டங்களுக்கும் வருகிறது வர்ணக் குறியீடு.

wpengine

ஆளுங் கட்சியினர் இன்று(29) பாராளுமன்றத்தினை வெளிநடப்பு செய்யத் தீர்மானம்…

wpengine