உலக செய்திகள்

வெனிசுலா சிறைக்குள் மோதல் – 29 பேர் பலி



(FASTNEWS|COLOMBO) – வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் உள்ள அகாரிகுவா சிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சிறைச்சாலையில் அந்நாட்டு அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சிறைச்சாலையில் கைதிகளுக்குள் கலவரம் ஏற்பட்டுள்ளது. கைதிகள் ஒருவருக்கொருவர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இந்த கலவரத்தில் 29 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 19 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

அமெரிக்கா, தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

wpengine

கொவிட் -19 : பலி எண்ணிக்கை 1770 ஆக அதிகரிப்பு

wpengine

ஏவுகணை வளாகத்திற்கு மறைந்த அப்துல் கலாமின் நாமம்

wpengine