உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுற்றாடல் பாதுகாப்பிற்காக அனைத்து செயற்திட்டங்களை மேலும் பலப்படுத்த ஜனாதிபதி பணிப்பு



(FASTNEWS|COLOMBO) – ஜூன் 05ஆம் திகதி இடம்பெறும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் வாரமொன்றை பிரகடனப்படுத்தி சுற்றாடல் பாதுகாப்பிற்காக தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அனைத்து செயற்திட்டங்களையும் பலப்படுத்தி அவற்றை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கேட்போர்கூடத்தில் நேற்று(24) இடம்பெற்ற மத்திய சுற்றாடல் அதிகார சபையின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

சுற்றாடல் அதிகார சபையினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

வெள்ளவத்தை இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் – கடற்படை முன்னாள் பேச்சாளர் தசநாயக்கவை கைது செய்ய உத்தரவு…

wpengine

நாட்டுக்கு மேலும் 4 மில்லியன் ‘சைனோபாம்’

wpengine

மஹிந்தவின் ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் மாபியா தொடர்கிறது – கபீர் ஹசீம்…

wpengine