உள்நாட்டு செய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழகம் 21 ஆம் திகதி மீண்டும் திறப்பு…



(FASTNEWS|COLOMBO) நாட்டின் பாதுகாப்பு நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளுக்காக, எதிர்வரும் 21 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழக விடுதியில் தங்கி கற்கும் மாணவர்களை நாளை(20) காலை 9 மணி முதல் மாலை 6 மணிக்கு இடையில் சமூகமளிக்குமாறு, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வீ.டி. கித்சிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு பல்கலைக்கழக அடையாள அட்டை அல்லது மாணவர் பதிவுப் புத்தகத்தை கொண்டுவருமாறு பல்கலைக்கழக பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ரயில்வே திணைக்கள சாரதி போட்டிப் பரீட்சை ஒத்திவைப்பு..

wpengine

மூன்று வான் கதவுகள் திறப்பு…

wpengine

களனிவெளி ரயில் போக்குவரத்தில் தாமதம்

wpengine