உள்நாட்டு செய்திகள்

தமிழர்களது மே18 நினைவு தின நிகழ்விற்கு இராணுவத்தினரால் இடையூறுகளும் விளைவிக்கப்படாது..



(FASTNEWS | COLOMBO) – இலங்கை தமிழர்களினால் அனுசரிக்கப்படுகின்ற மே 18 நினைவு தின நிகழ்விற்கு இராணுவத்தினரால் எந்தவித இடையூறுகளும் விளைவிக்கப்படாது என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார்.

சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் என்ற பெயரில் யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் இந்த முறையும் இராணுவத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளமையை முன்னிட்டு கொழும்பில் இன்று(17) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டவிதிகளுக்கு உட்பட்டு, நினைவு தினத்தை அனுசரிப்பதற்கான உரிமை அனைவருக்கும் காணப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட 25 கைதிகள்

wpengine

கொள்ளுப்பிட்டி பகுதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine

106 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிப்பு

wpengine