உலக செய்திகள்

துபாயில் விமானம் விழுந்து விபத்திற்குள்ளானதில் 04 பேர் உயிரிழப்பு…



(FASTNEWS|COLOMBO) – துபாய் விமான நிலையத்தின் அருகே சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

துபாயில் அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனமான ‘ஹனிவெல்’லுக்கு சொந்தமான குட்டி விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதில் இங்கிலாந்தை சேர்ந்த 3 பேரும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவரும் பயணம் செய்தனர்.

விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சில வினாடிகளில் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.

உடனே மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த விபத்து காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையம் சிறிது நேரம் இயங்கவில்லை. நிலைமை சீரடைந்ததும் மீண்டும் செயல்பட தொடங்கியது.

விமான விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹாங்காங்  தேர்தல் : ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கண்டனம்

wpengine

இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி

wpengine

இலவசத்தை நம்பியதால் வீங்கிய உதடு- அமெரிக்க மொடல் அழகியின் கதை

News Editor