உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாதம் மற்றும் வன்முறைகள் தொடர்பில் ஆராய சகல அதிகாரங்களுடன் கூடிய தெரிவுக் குழு..



(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும், அதற்கு பின்னர் எமது நாட்டில் இடம்பெறும் வன்முறைகளுக்கும் பாதுகாப்புத்துறையில் ஏற்பட்ட தளர்வே காரணம் என திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன, தெரிவித்துள்ளார்.

இன்று (15) இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தப் போது அமைச்சர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

பாதுகாப்பில் எவ்வாறு தளர்வு ஏற்பட்டது. ஏன் நடந்தது? இதற்கு பொறுப்பானவர்கள் பொறுப்புக் கூறலிலிருந்து ஏன் விலகியுள்ளனர் என்பவை தொடர்பில் ஆராய சகல அதிகாரங்களு​முடைய தெரிவுக் குழுவொன்றை அமைக்க சபாநாயகர் முன்வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் கையெழுத்துடன்,சகல கட்சி உறுப்பினர்களின் பங்களிப்புடன் பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை அமைப்பது குறித்த யோசனையை சபாநாயகரிடம் கையளித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

Related posts

தேங்காய்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

wpengine

அர்ஜுன் மகேந்திரனை ஒப்படைக்குமாறு எழுத்துமூல கோரிக்கை…

wpengine

CSN நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்தமைக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு…

wpengine