உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு கலைப்பு – விஷேட அதிரடிப்படையினர் இணைப்பு



ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவை கலைத்து விட்டு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில்; விரைவில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கலைக்கப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வாரங்களுக்குள் இந்நடவடிக்கைகள் முழுதும் பூர்த்தி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 10 வருடங்களாக சேவையாற்றிய அதே பாதுகாப்பு பிரிவினரையே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதும் தொடர்ந்து சேவையாற்றி வந்தார்.

இதேவேளை றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த மூவருக்கு தொடர்பிருப்பதாக அண்மையில், ராஜித்த சேனாரத்ன தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

நாடு முழுவதும் போலி வைத்தியர்கள் கண்டுபிடிப்பு

wpengine

ஜனாதிபதி ஈரான் விஜயம்…

wpengine

மறு அறிவித்தல் வரை பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை

wpengine