உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு



(FASTNEWS|COLOMBO) நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 03 ரூபாவாலும், 95 ஒக்டைன் பெற்றோல் 05 ரூபாவாலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுப்பர் டீசல் 02 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் எவ்வித மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

லங்கா ஐஓசி நிறுவனமும் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது.

அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் ஒரு லீற்றர் 03 ரூபாவாலும், 95 ஒக்டைன் பெற்றோல் ஒரு லீற்றர் 05 ரூபாவாலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 02 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் எவ்வித மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பசுமை விவசாயத்திற்கு ஜனாதிபதி செயலணி

wpengine

புதிய உள்ளூராட்சி மன்றங்கள் அமைக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்…

wpengine

புத்தளம் , தப்போவ பிரதேசத்தில் 200 பேர் வெள்ள நீரில் சிக்கி தவிப்பு

wpengine