உள்நாட்டு செய்திகள்

கடற்றொழிலாளர்களுக்கு விஷேட அடையாள அட்டை அறிமுகம்…



(FASTNEWS|COLOMBO) கடற்றொழிலாளர்களுக்காக புதிய அடையாள அட்டை ஒன்று அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய கடற்றொழில் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ்.ருவான் சந்திர தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல் போதைப்பொருள் அற்ற நாடு என்ற வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக எதிர்க்கொள்வதற்கு இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதல்கட்டத்தின் கீழ் 5000 மீன்பிடி வள்ளங்களை சேர்ந்த 30000 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. எதிர்வரும் காலங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் முழு விபரமும் இதன் கீழ் பெற்றுக் கொள்ளப்படும். தற்பொழுது பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடற்றொழில் துறைமுகங்களில் இருந்து மீன்பிடி வள்ளங்கள் வெளியேறும் பொழுதும் பிரவேசிக்கும் பொழுதும் அது தொடர்பான விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

Related posts

A/L டியூசன் வகுப்புகளை தாமதப்படுத்துங்கள், கல்முனை மாநகர ஆணையாளர் அறிவுறுத்தல்..!

wpengine

கண்டி – மஹியங்கனை 18ம் வளைவு வீதிக்கு பூட்டு..!

wpengine

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

wpengine