உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் போதைப் பொருளுடன் கடுவலையில் ஒருவர் கைது…



(FASTNEWS|COLOMBO) பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில், ஹெரோயின் எடுத்துச் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடுவலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 556 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோகந்தர பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
குறித்த சந்தேகநபர் இன்று கடுவலை நீதவான் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

Related posts

கைது செய்யப்பட்ட வைத்தியருக்கு எதிரான பெண்களது முறைப்பாடுகள் தொடர்பில் நாளை சோதனை

wpengine

சர்வதேச விண்வெளி நிலையம் இலங்கை வான்பரப்பினூடாக இலங்கையை கடக்கிறது..

wpengine

பிரதமரின் சுதந்திர தின செய்தி

wpengine