உள்நாட்டு செய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை…



(FASTNEWS|COLOMBO) இலங்கையின் தேசிய பாதுகாப்பு தற்போது முழுமையாக உறுதிசெய்யப்பட்டுள்ளதனால் தமது நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பிரயாணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கி இலங்கைக்கு மீண்டும் வருகை தருவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்குமாறு ஜனாதிபதி அனைத்து தூதுவர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாடசாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு பொலிசாரும் முப்படையினரும் இணைந்து விசேட பாதுகாப்பு குழுவொன்றினை ஸ்தாபித்து குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts

ரயில் தண்டப்பணம் நாளை முதல் அதிகரிப்பு

wpengine

மாசி கருவாடு இறக்குமதியை நிறுத்தும் காலம் விரைவில்.. – மஹிந்த அமரவீர

wpengine

ஐ.சி.சி தரவரிசையில் இலங்கை அணியானது முன்னேற்றம்..

wpengine