உலக செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…



(FASTNEWS|COLOMBO) பப்புவா நியூ கினியாவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் புலோலோவின் தென்கிழக்கில் 33 கிமீ தூரத்தில் கடலுக்கடியில் 127 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இப்பகுதியில் இருந்து சுமார் 250 கிமீ தொலைவில் உள்ள தலைநகர் போர்ட் மோர்ஸ்பியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிலநடுக்கத்தினால் பெரிய அளவில் எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

மிகவும் ஆழமான பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

Related posts

அரசியல் விளம்பரங்களையும் தடை செய்கிறது டுவிட்டர்

wpengine

ஜப்பான், சீனா, தென்கொரியா உச்சி மாநாடு – 9 ஆம் திகதி ஆரம்பம்…

wpengine

பிரெக்ஸிட் ஒப்பந்த திகதியை நீடிக்க ஐரோப்பிய தலைவர்கள் இணக்கம்

wpengine