ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தனக்கு உயிர்பிச்சை போடுமாயின் தனக்கு தெரிந்த உண்மைகளை அம்பலப்படுத்துவதாக மாகந்துரே மதூஷ் CID இடம் வாக்குமூலம்…



(FASTGOSSIP| COLOMBO) – தனக்கு உயிர்பிச்சை போடுமாயின் தனக்கு தெரிந்த தன்னால் மேற்கொண்ட அனைத்து குற்றச்சாட்டு நடவடிக்கைகள் மற்றும் மறைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் தொடர்பிலான அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்துவதாக மாகந்துரே மதூஷ், குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு தெரிவித்துள்ளதாக குறித்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மாகந்துரே மதூஷ் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டது முதல் பயத்துடன் அழுதவண்ணமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துபாய் நாட்டில், அந்நாட்டு பொலிசாரினால் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதூஷ் நேற்றுமுன்தினம் (05) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சல்வார் கமீஸில் அசத்தும் சங்கா [VIDEO]

wpengine

ஆசியக் கிண்ண போட்டிகளை ஒளிபரப்பாக்கும் நேரங்கள் அறிவிப்பு…

wpengine

பெற்றோல் – டீசல் விலைகளை இம்மாதம் அதிகரிப்பதாக அரசு IMF இற்கு தெரிவிப்பு..

wpengine