உள்நாட்டு செய்திகள்

மூன்று விற்பனை நிலையங்களில் தீப்பரவல்…



(FASTNEWS|COLOMBO) கிரிபத்கொடை பகுதியில் மூன்று விற்பனை நிலையங்களில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக குறித்த விற்பனை நிலையங்கள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் குறித்த இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன், பின்னர் அது மற்றைய விற்பனை நிலையங்களுக்கு பரவியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தீப்பரவலினால் எவருக்கும் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை என் தெரிவிக்கப்படுகின்றன.

தீயினை கட்டுப்படுத்துவதற்காக கம்பஹா தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தடுப்பூசியை செலுத்திக் கொள்ள

wpengine

ஆக்ரோஷத்தை வரவேற்கிறார் தோனி

wpengine

சம்பள உயர்வு வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் சாத்தியம்.

wpengine