உள்நாட்டு செய்திகள்

பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு…



(FASTNEWS|COLOMBO) மாரவில நகரில் போதைப்பொருள் வர்த்தக ஒருவர் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த போதைபொருள் வர்த்தகர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

உயிரிழந்தவர் 31 வயதுடைய, சிலாபம் – முகுனுவடவன பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரை பொலிசார் கைது செய்ய சென்ற போது அவர், பொலிசார் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். இதன்போதே அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அமைச்சர் வடிவேல் சுரேஷ் இராஜினாமா…

wpengine

ஜனாதிபதி நுவரெலியாவுக்கு

wpengine

மேலதிக தகவல்களை வழங்க ரிஷாத் பதியுதீன் பொலிஸ் விரைவு 

wpengine