உள்நாட்டு செய்திகள்

நான் அமெரிக்க பிரஜை அல்ல – கோட்டா..



(FASTNEWS | COLOMBO) – தொடர்ந்தும் தான் அமெரிக்க பிரஜை இல்லை எனவும் தற்போது இலங்கை பிரஜை எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்று(29) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

“தற்போது 99% ஆன வேலைகள் முடிவடைந்துள்ளன. இறுதியாக எனக்கு ஒரு கடிதம் அந்நாட்டு அரசினால் வழங்கப்பட வேண்டும். இப்போது நான் அமெரிக்கா பிரஜை அல்ல.. எனது கடவுச்சீட்டும் கையளிக்கப்பட்டுள்ளது.

எனது விருப்பத்தின் பேரில் எனது பிரஜாவுரிமையினை நீக்கிக் கொள்வதாக சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும். அதனை செய்து விட்டேன். இன்று நான் இலங்கை பிரஜை. இரட்டை பிரஜை அல்ல ” என் தெரிவித்துள்ளார்.

Related posts

நீதிபதிகள் 34 பேருக்கு இடமாற்றம்

wpengine

அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்…

wpengine

பாடசாலை காலணிகள், புத்தகப்பை விலைகள் குறைகின்றன !

News Editor