ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தை ஒழிக்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன் – கோட்டாபய…



(FASTGOSSIP|COLOMBO) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட்டு, புலனாய்வுத்துறையை வலுப்படுத்தி, பொதுமக்களை கண்காணிப்பதன் மூலம், இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் பரவுவதை தம்மால் தடுக்க முடியும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரொயிட்டர்ஸ் சர்வதேச செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

யுத்தக்காலத்தில் தம்மால் கட்டியெழுப்பப்பட்ட தீவிர கண்காணிப்பு கட்டமைப்பையும், புலனாய்வு வலையமைப்பையும் பலவீனப்படுத்தாது இருந்திருந்தால், இவ்வாறான தாக்குதல்களை இந்த அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தி இருக்க முடியும் எனவும், அரசாங்கம் இந்த சூழ்நிலைக்கு தயாராக இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனாலேயே இந்த வலிநிறைந்த சூழ்நிலை உருவாகி இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த சூழ்நிலையில் தாமே 100 சதவீதம் நாட்டுக்கு பொறுத்தமான ஜனாதிபதி வேட்பாளராக இருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

07 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக இருந்த பிரபல மொடல் நடாஷா…. (PHOTOS)

wpengine

சகல கத்தோலிக்க மதத் தலைவர்களுக்கும் பலத்த பாதுகாப்பு – ரஞ்சித் மல்கம் ஆண்டகைக்கு, குண்டு துளைக்கா கார்கள்..

wpengine

வெற்றிக்கான காரணம் மற்றும் மென்டிஸ் குறித்து சங்கா கருத்து…

wpengine