ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

NTJ முஸ்லிம் பள்ளிகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த திட்டம்…?



(FASTGOSSIP| COLOMBO) – தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினால் முஸ்லிம் பள்ளிவாயல்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படலாம் என பொலிசாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிறிஸ்தவர்களது ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று முன்னெடுக்கப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் தொடர்ந்தும் முன்னெடுக்க வாய்ப்புக்கள் உள்ளதாக பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தினால் பொலிஸ் பிரிவுகளுக்கு அறியப்படுத்தியுள்ளது.

‘ஹுப்பு பள்ளி’ எனும் அவுலியா பள்ளிகளை (இறந்த முஸ்லிம் சமய தலைவர்களது கல்லறைகள்) குறியாகக் கொண்டு தாக்குதல் நடத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்கும் தனியான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

Related posts

ராஜபக்சர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!

wpengine

யானைக்குட்டியுடன் நடைபயிற்சியில் ஈடுபட்ட கோத்தபாய! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மெய்க்காப்பாளர்.

wpengine

இலங்கையின் வேகப்பந்தின் நிலை தொடர்பில் தென்னாபிரிக்காவை கதிகலங்க வைத்த விஷ்வ…

wpengine