உள்நாட்டு செய்திகள்

திஸ்ஸ அத்தநாயக்கவை விடுவிக்க உத்தரவு…



(FASTNEWS|COLOMBO) ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முடிவுக்கு கொண்டுவருவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு இன்று(24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆரச்சி முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, வழக்கில் இருந்து பிரதிவாதியான ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்கவை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆரச்சி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி காலத்தில் தவறான ஆவணம் ஒன்றை தயாரித்து, அதனை ஊடகங்களுக்கு வெளியிட்டமை தொடர்பில், திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்…

wpengine

வெளிநாட்டவர்களின் வீசா அனுமதி காலம் நீடிப்பு

wpengine

பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு ஒத்திவைப்பு

wpengine