உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.க வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம் : புலனாய்வு பிரிவின் புதிய அறிக்கை



புலனாய்வு பிரிவினரின் புதிய அறிக்கையின் படி, ஐக்கிய தேசியக் கட்சி 118 ஆசனங்களைப் பெற்று வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 80 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன தலா 10 ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளுமென குறித்த அறிக்கை தெரிவித்துள்ளது.

தேர்தல் களத்தில் அன்றாடம் நடந்தேறும் சம்பவங்களின் அடிப்படையில், ஆசனங்களின் எண்ணிக்கையிலும் சிறு மாற்றங்கள் ஏற்படுவதாக குறித்த அறிக்கை தெரிவித்துள்ளது.

புலனாய்வுப் பிரிவினரால் இதற்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையிலும் ஐக்கிய தேசிய கட்சிக்கே அதிக ஆசனங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது ஐ.தே.க 105 ஆசனங்களை பெற்றுக்கொள்ளுமெனவும், ஐ.ம.சு.மு 90 ஆசனங்களை பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய அறிக்கையின் பிரகாரம் ஐ.ம.சு.முன்னணியின் ஆசனங்கள் ஒரேயடியாக 10 குறைவடைந்துள்ளது.

எவ்வாறெனினும் தமது கட்சி 115 இற்கு அதிகமான ஆசனங்களை பெற்று ஆட்சியமைக்குமென, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க

Related posts

வலுக்கும் கொரோனா மரணங்கள்

wpengine

ஐக்கிய தேசிய கட்சியினர் இன்று வாகன எதிர்ப்பு பேரணி…

wpengine

ஹட்டன் விபத்தில் இளைஞன் பரிதாபகரமாக பலி

wpengine