உள்நாட்டு செய்திகள்

கராபிட்டிய வைத்தியசாலையின் கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே பாய்ந்து நபரொருவர் தற்கொலை..



(FASTNEWS | COLOMBO) – கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே பாய்ந்து நபரொருவர் இன்று(19) அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்த (நோயாளி) வெலிகம – தெனிபிட்டிய பகுதியை சேர்ந்த 52 வயதான நபர் ஒருவரே இவ்வாறு மருத்துமனையின் கட்டிடமொன்றின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

20 ஆவது திருத்தம் : அறிக்கை இன்று அமைச்சரவைக்கு

wpengine

ஷானி அபேசேகர சேவையில் இருந்து இடைநிறுத்தம்

wpengine

ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்து செய்தி…

wpengine