உள்நாட்டு செய்திகள்

உமா ஓயா மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகள்…



(FASTNEWS|COLOMBO) உமா ஓயா மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

கூர்த்த இந்த மின்னுற்பத்தி நிலையத்தின் மூலம் 120 மெகாவொட் மின்வலுவை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் மேலும் பல மின்னுற்பத்தித் திட்டங்கள் அமுலாக உள்ளதுடன், இதன் மூலம் மின்சார நெருக்கடிக்குத் தீர்வு காணப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உமா ஓயா திட்டத்தின் மூலம் இரு போகங்களிலும் 6 ஆயிரம் ஹெக்டயர் காணியில் நெற்செய்கை மெற்கொள்ளலாம் என இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஊழலில் ஈடுபடும் சிறைச்சாலை அதிகாரிகளை மடக்கும் வேலைகள் ஆரம்பம்..

wpengine

அரச தாதியர் சங்கத்தினரின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டது..

wpengine

ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து குறித்து ஆராய உயர் நீதிமன்றம் உத்தரவு…

wpengine