ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

விமானப்படை உத்தியோகத்தரின் நான்கு குழந்தைகளுக்கும் ஜனாதிபதியிடம் இருந்து நிதியுதவி…



(FASTNEWS | COLOMBO) – விமானப்படை உத்தியோகத்தரான அயேஷா தில்ஹானி தனது முதலாவது பிரசவத்தில் இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் என நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.

பெற்றோர்களின் உதவியுடன் குழந்தைகளை பராமரித்தாலும் அரச உத்தியோகத்தர்களாகிய இந்த தாய், தந்தையர்களுக்கு குழந்தைகளை பராமரிப்பதற்கான செலவினை சமாளிக்க முடியாது.
எனவே “ஜனாதிபதியிடன் சொல்லுங்கள்” நிகழ்ச்சித்திட்டத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு ஜனாதிபதியிடம் உதவி கோருவதற்கு அயேஷா முடிவு செய்தார்.

“ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” நிகழ்ச்சித்திட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற இந்த அழைப்பு தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, குழந்தைகளின் பராமரிப்பிற்காக தலா ஐந்து இலட்ச ரூபா வீதம் நான்கு குழந்தைகளுக்கும் 20 இலட்ச ரூபா நிதியுதவியினை வழங்கினார்.
இந்நிதியுதவியினை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்த திருமதி. தில்ஹானி, அவரது கணவர், தாயார் உள்ளிட்ட நான் குழந்தைகளுடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

அமைச்சரவையில் 06 வெற்றிடங்கள் – தேசிய அரசில் மொத்தமாக 16 பதவிகளுக்கு வெற்றிடம்…

wpengine

பூஜித் ஜயசுந்தரவின் இங்கிலாந்து பயணத்திற்கு தடங்கள் – நிகழ்சித் திட்டமும் இரத்து…

wpengine

இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க மெண்டிஸ் நிறுவனத்திடம் இருந்து 30 இலட்சம் ரூபாவை பெற்றுள்ளார்…

wpengine