உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில பகுதிகளுக்கு 100 மில்லி மீற்றர் அளவில் மழை பெய்யக் கூடும்…



(FASTNEWS|COLOMBO) நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று மழை பெய்யக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அடுத்து வரும் 24 மணித்தியாளங்களில் 100 மில்லி மீற்றர் மழை எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய, தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும்பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது பின்னர் கிழக்கு மாகாணத்திற்கும் பரவக் கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

முஸ்லிம் மதத் தலைமைகள் இறுதித் தேர்தல் முடிவினை மாற்றியமைக்க மூளைச்சலவை செய்கின்றனர் – ஞானசார தேரர்

wpengine

கட்சித் தலைவர் சந்திப்பு தொடர்பில் சபாநாயகர் அலுவலகம் அறிக்கை..

wpengine

கொஸ்கம வெடிப்பு – வதந்திகளுக்கு இடமளிக்க வேண்டாமென ஊடகங்களுக்கு கோரிக்கை

wpengine