உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அதிக ஒலி எழுப்பும் வாகனங்களை சுற்றிவளைக்க நடவடிக்கை – ஜனாதிபதி பணிப்புரை…



(FASTNEWS|COLOMBO) போக்குவரத்து சட்டங்களை மீறுதல் மற்றும் 105 டெசிபல் மீட்டரை விட அதிக சத்தத்துடன் ஒலி எழுப்புதல் தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அதிக சத்தத்தை எழுப்பும் ஒலி எழுப்பிகளுடனான வாகனங்களை சுற்றிவளைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டில் அடுத்து வரும் மூன்று வாரங்கள் மிகவும் நெருக்கடியாக இருக்கும்- சபையில் பிரதமர்

News Editor

20ம் திருத்தச் சட்டமூலம பாராளுமன்ற விவாதம் இன்று..

wpengine

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை 20 ஓட்டங்களினால் வெற்றி

wpengine