வணிகம்

124 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை சுங்கம்…



(FASTNEWS|COLOMBO) இந்த வருடத்தின் கடந்த 3 மாதங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 124 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாக, இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 41 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட தங்கம், சிகரட், போதைப்பொருள், வௌிநாட்டு நாணயம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சுங்க திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வாறு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு, அரசுடமையாகப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி 124 மில்லியன் ரூபாவாகும் என சுங்க ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் சட்டவிரோதமாக, அதிக பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரிப்பு

wpengine

கிளிநொச்சி வெள்ள நிவாரணப் பொருட்கள் தொடர்பான சர்ச்சை – சதொச நிறுவனத் தலைவர் விளக்கம்…

wpengine

கடன் தரவரிசை கீழிறக்கம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து எதிர்ப்பு…

wpengine