உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் மைத்திரி – மஹிந்த இடையே தீர்மானிக்க கலந்துரையாடல் இன்று(04)…



(FASTNEWS|COLOMBO) 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இன்று(04) மாலை 4 மணியளவில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில், எதிர்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை(05) இடம்பெறவுள்ளது.

Related posts

முன்னாள் பாதாள குழுவின் தலைவர் தெல் பாலாவின்(Thel Bala) உடலம் இலங்கைக்கு….

wpengine

சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி தலைமையில் நாளை(21)…

wpengine

கொழும்பில் தொடர்ந்தும் வலுக்கும் கொரோனா

wpengine