உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புத்தாண்டு சுபநேர சீட்டு ஜனாதிபதியிடம் கையளிப்பு…



(FASTNEWS|COLOMBO) சிங்கள, தமிழ் புத்தாண்டு சுபநேர சீட்டு சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று(02) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

பாரம்பரியங்களுக்கேற்ப சுபநேரங்களை அடையாளப்படுத்திய சீட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

புதுவருடப் பிறப்பு புண்ணிய காலம், உணவு சமைத்தல், அடுப்பு மூட்டுதல், உணவு பரிமாறுதல் மற்றும் தொழிலுக்காக புறப்படுதல் ஆகிய விடயங்கள் சுபநேர சீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சின் செயலாளர் பர்னாட் வசந்த, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related posts

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை நிராகரிப்பு

wpengine

தேசிய அரசாங்கம் ஸ்தாபிப்பது குறித்து கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இன்று(06) பேச்சுவார்த்தை…

wpengine

ஆட்பதிவுத் திணைக்களம் சனிக்கிழமையும் திறந்திருக்கும்..

wpengine