உள்நாட்டு செய்திகள்

மன்னார் மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் கைது…



(FASTNEWS|COLOMBO) 2008ம் ஆண்டு நபர் ஒருவரை கடத்தி காணாமல் ஆகியமை தொடர்பில், மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் உபுல் அலவத்த குற்றபுலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று(01) அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டதை அடுத்தே அவர் கைதுசெய்யப்பட்டதாக, அந்த திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி பிலியந்தல பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கடத்திச்சென்று காணாமல் ஆக்கியமை தொடர்பில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் உபுல் அலவத்த நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

புதிய அரசியல் சாசனம் தொடர்பில் ஜனாதிபதி தலையிடக் கூடாது..

wpengine

அனைத்து பாடசாலைகளும் திங்களன்று ஆரம்பம்

wpengine

மதுபானசாலைகளுக்கு நான்கு நாட்களுக்கு பூட்டு..

wpengine