உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கைப்பற்றப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருள் இன்று(01) அழிப்பு…



(FASTNEWS|COLOMBO) நாட்டில் கைப்பற்றப்பட்ட 729 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள், சப்புகஸ்கந்தையில் உள்ள களஞ்சியசாலை தொகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இந்த போதைப்பொருட்கள் இன்று(01) அழிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், குறித்த நடவடிக்கைக்கான அரச இரசாயண பகுப்பாய்வின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளல் என்பன நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் சமந்த கித்தலவஆராச்சி தெரிவித்துள்ளார்.

நீதவான்கள் முன்னிலையில் இந்த கொக்கேய்ன் போதைப்பொருளை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பொதுபல சேனா அமைப்பின் ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு – மட்டக்களப்பு வாகன போக்குவரத்து பாதிப்பு..

wpengine

காமினி செனரத்துக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணைகள் நாளை(09) வரை ஒத்திவைப்பு..

wpengine

குருணாகல் புராதன கட்டடம் : மனு தாக்கல்

wpengine