ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தனியார் பேரூந்துகளுக்கு தனித்துவமான நிறம் அமுலுக்கு…



(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் திங்கட் கிழமை(01) முதல் தனியார் பேரூந்துகளுக்கு புதிய சட்டமாக, பேருந்துகள் அனைத்தும் தனி நீல வர்ணப்பூச்சு உடையதாக இருக்க வேண்டும் என்ற புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு தனியார் பேருந்துகளில் காணப்படும் ஸ்டிக்கர்கள், வர்ணப்பூச்சு, ஒலி அமைப்புகள், ஏனைய ஒலிச் சாதனங்கள் ஆகியவை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படும்.

இதற்காக எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து இரு மாதங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இக்கால அவகாசத்தினுள் மேற்கூறப்பட்ட விடயங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் 475 வழித்தடங்கள் ஊடாக 6,000 தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வருவதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மஹிந்தவை கண்டிக்க மனம்திறந்தார நவநீதம்பிள்ளை..

wpengine

பாரத கொல்லப்படாமல் இருந்திருந்தால் நாமல்-ஹிருணிகா திருமணம் நடந்திருக்கும்

wpengine

மக்களை கட்டுப்படுத்த 3G மற்றும் 4G தொடர்புகளை முடக்கத் திட்டம்…

wpengine