உள்நாட்டு செய்திகள்

தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்றுடன்(28) நிறைவு…



(FASTNEWS|COLOMBO) தாதிய சேவையில் தாக்கம் செலுத்தும் பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சர் உட்பட, நிர்வாக அதிகாரிகள் தீர்வு வழங்காமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று முன்தினம்(26) முதல் தாதியர்கள் சிலர் முன்னெடுத்த சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை இன்று(28) காலை 8 மணியுடன் நிறைவடைகிறது.

இதேவேளை, தாதியர்களின் குறித்த போராட்டம் காரணமாக, நாட்டில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளின் சேவைகளும் பாதிக்கப்பட்டதுடன், நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு முகம் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

எவ்வாறிருப்பினும், இன்று தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க சுகாதார அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், நாடளாவிய ரீதியில் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

தற்போதைய அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு

wpengine

கொழும்பில் மீண்டும் மின்சாரத் தடை

wpengine

டிப்பர் வாகனத்தில் சிக்கி பொலிஸ் உத்தியோகத்தர் பலி

Azeem Kilabdeen