ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

FB காதலனைத் தேடி காலி வந்த பாடசாலை சிறுமி பாலியல் வல்லுறவுக்கு..



(FASTNEWS | COLOMBO) – முகநூல் ஊடாக சந்தித்த 15 வயது இளம் சிறுமி மற்றும் அவளது நண்பியான 13 வயதுடைய மற்றுமொரு சிறுமி கடத்தப்பட்டு அதில் ஒரு சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக சந்தேகத்தின்பேரில் காலியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு எல்பிட்டிய நீதிவான் கான் மீகஹகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞனை இனங்கண்டுள்ளதாகவும் பொலிசார் கைது நடவடிக்கைளை முன்னேடுத்துள்ளதாகவும் எல்பிட்டிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதாகி விளக்கமறியலில் உள்ள காலி பிரதேசத்தினை சேர்ந்த சுமுது லக்மால் எனும் 21 வயதுடைய இளைஞன் என்றும்,
வல்லுறவுக்குட்படுத்திய இளைஞன் 19 வயதுடைய ஹபராதுவ பிரதேசத்தில் வச்க்கும் மலிது பிரசாத் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட குறித்த சிறுமி முகநூல் ஊடக நட்பு மலர்ந்து அது காதலாக மாறியதாகவும், குறித்த சிறுமியை காலி நகருக்கு வருமாறும் குறித்த சந்தேக நபர் குறுந்தகவல் அனுப்பியுள்ள நிலையில், குறித்த சிறுமியும் தனது தோழியுடன் காலிக்கு சென்றுள்ளனர். பின்னர் முதலாவது சந்தேக நபர் குறித்த சிறுமியினை கண்டதும் இவர்கள் சிறு பிள்ளைகள் எனத் தெரிந்து அவ்விடத்தினை விட்டுச் சென்றுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

Related posts

பயங்கரவாத தாக்குதல் சதி – மொஹமட் நிஷாம்டீனுக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக வழங்க பணிப்பு

wpengine

கட்டார் அரச குடும்பத்தின், வங்கி விபரங்கள் இணையத்தில் அம்பலம்

wpengine

பாதணி வாங்குவதற்காய் சாதாரண வியாபாரியை நாடிய ஜனாதிபதி

wpengine