ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

லக்ஷ்மன், பௌசி உள்ளிட்ட SLFP 15 பேருக்கு நல்லாட்சியில் அமைச்சுப் பதவிகள் – மைத்திரி இணக்கம்..



(FASTNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை அமைச்சர்களாக நியமிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் பிரகாரம் அமைச்சர்களாக நியமிக்கவுள்ள அக்கட்சி உறுப்பினர்களின் பெயர்களை, ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுதந்திரக் கட்சியினர் சிலரை அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளாதாகவும் கூறப்படுகிறது. அதில் விஜித் விஜயமுனி சொய்சா, பியசேன கமகே, லக்ஸ்மன் செனவிரத்ன, ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரே அமைச்சர்களாக நியமிக்கப் பரிந்துரைக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கம் என்ற அடிப்படையில், அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான புதிய பரந்துபட்ட கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் 15 பேர் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related posts

ஆறிய கஞ்சி பழங் கஞ்சாகிய கதையிலிருந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மீலேளுகிறது.. – மஹேலவும் கிண்டல்…

wpengine

2021ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அட்டவணை

wpengine

இலங்கை தேசிய அணியில் கமிந்து மென்டிஸ்… (ஒரு கண்ணோட்டம்)

wpengine