உள்நாட்டு செய்திகள்

மொரட்டுமுல்ல துப்பாக்கிச்சூடு – பெண்ணொருவர் கைது..

(FASTNEWS | COLOMBO)- பிலியந்தலை மொரட்டுமுல்ல பிரதேசத்தில் இரண்டு பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு அடைக்கலம் வழங்கிய பெண் ஒருவர் மிரிஹானை விஷேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

34 வயதுடைய வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண் நேற்று வெலிகமயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட பெண் இன்று(21) மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

கடந்த 14ம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்த பஸ் உரிமையாளர் ஒருவரும், அவரின் மகனின் நண்பனும் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சீனி உற்பத்தி சிக்கல் நிலையை எதிர்கொண்டுள்ளதால் சீனியின் விலையில் மாற்றம்..

wpengine

கடன் நெருக்கடி – செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவர திட்டம்..!

wpengine

சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில்

wpengine