உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்கும் நடவடிக்கை இன்றுடன்(19) நிறைவு



(FASTNEWS|COLOMBO) கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன்(19) நிறைவடைகின்றன.

இன்று(19) மாலை 5 மணி வரை முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதுவரையில் 950 முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அவற்றில் 31 முறைப்பாடுகள் ஆரம்பகட்ட விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

வித்தியா படுகொலை குற்றவாளிகளின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு…

wpengine

வெந்நீரூற்று கிணறு பகுதிக்கு தற்காலிக பூட்டு

wpengine

வசந்த சமரசிங்கவிடம் 100 கோடி நஷ்டஈடு கோருகிறார் சம்பிக்க..

wpengine