உலக செய்திகள்

நிலச்சரிவில் 10 பேர் உயிரிழப்பு…



(FASTNEWS|CHINA) சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலச்சரிவில் லின்பென் சிட்டி பகுதியில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று காலை கட்டிட இடிபாடுகளில் இருந்து 7 பேரின் உடல்கள் மீட்கபட்டதுடன், மேலும், 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

UPDATE – தென் சிலி பகுதியில் பாரிய நிலநடுக்கம்,சுனாமி எச்சரிக்கை விடுப்பு..

wpengine

இலங்கை மீது இந்தியா தாக்குதல் நடத்த வேண்டும் – அ.தி.மு.க எம்.பி

wpengine

‘பனாமா லீக்ஸ்’ விவகாரம் குறித்த புலனாய்வுக்குழு விசாரணைக்கு நவாஸ் ஷெரீப் ஆஜர்..

wpengine