உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரும் மேன்முறையீட்டு மனுவை மீளப் பெற்றது…



(FASTNEWS | COLOMBO) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 122 பேர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தொடுத்த வழக்கை மஹிந்த ராஜபக்ஷ தமது பதவி சட்டபூர்வமானது என தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்த வழக்கினை மஹிந்த தரப்பு இன்று(14) மேன்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இருந்து மீளப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகிய கட்சியை சேர்ந்த 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வருடம் இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியை தொடர்ந்து வழங்கப்பட்ட பிரதமர் பதவி மற்றும் அமைச்சு இராஜாங்க அமைச்சு பதவிகளுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ உட்பட 49 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் குறித்த வழக்கை கடந்த 12ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழு வாபஸ் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மத்திய வங்கியின் ஆளுனர் பதவி தொடர்பில் ஜனாதிபதி முக்கிய முடிவு

wpengine

இனேஷா டீச்சர் உயிரிழப்பு, மரணத்திற்கு வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரே காரணம்..!

wpengine

இலங்கையிலும் ஐ.எஸ் அச்சுறுத்தல்

wpengine