உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின் மனு ஒத்திவைப்பு…



(FASTNEWS|COLOMBO) மரண தண்டனைக்கு எதிராக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன உட்பட 06 பேர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் மே மாதம் 21ம் திகதி அழைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு நீதியரசர்களான சிசிர தி ஆப்ரு, பிரியந்த ஜயவர்தன, விஜித மலல்கொட, பிரீதி பத்மன் சுரசேன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் இன்று(12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர் முஹமட் சியாம் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் தமக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என்றும் இதன் காரணமாக அந்த குற்றங்களில் இருந்து தம்மை குற்றமற்றவர்களாக விடுதலை செய்ய உத்தரவிடுமாறும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது புதல்வர் உள்ளிட்ட அறுவரும் தமது மேன்முறையீட்டு மனுவில் கூறியுள்ளனர்.

Related posts

செலசினே முன்னாள் தலைவரை கைது செய்யுமாறு பிடியாணை…

wpengine

உதயங்கவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு FCID நீதிமன்றில் கோரிக்கை

wpengine

பிரதான பாதையிலான ரயில்வே சேவைகளில் தாமதம்…

wpengine