உள்நாட்டு செய்திகள்

சுமார் 161 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது…



(FASTNEWS|COLOMBO) மொறட்டுவை – ராவத்தாவத்தை பகுதியில் 161 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹெரோயின் சுமார் 1800 மில்லியன் ரூபா பெறுமதியுடையது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது பெருந்தொகையான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

500 கோடி பெறுமதியான வைரக்கல்லுடன் கைது செய்யப்பட்ட கெலும் இந்திக்க என்பவரின் வீட்டில் இருந்து குறித்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கழிவுப் பொருட்களினால் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்திட்டம் விரைவில்..

wpengine

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்…

wpengine

சஞ்சீவ கொலை தொடர்பில் இரகசிய அறிக்கை சமர்ப்பிப்பு

Azeem Kilabdeen