உலக செய்திகள்

அவுஸ்ரேலியா, காட்டுத் தீயில் 30 குடியிருப்புகள் மற்றும் 70 கட்டடங்கள் அழிவு…



(FASTNEWS | AUSTRALIA) – அவுஸ்ரேலியா விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் 30 குடியிருப்புகள் மற்றும் 70 கட்டடங்களை அழிந்துள்ள நிலையில் அப்பகுதி மக்கள் இன்று(09) துப்பரவு பணியை ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெப்ரவரி மாத இறுதியில் அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் பலத்த பாதிப்பு ஏற்பட்டிருந்தது. விக்டோரியா மாகாணத்தில் மாத்திரம் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தீபரவல் பதிவாகி இருந்தது.

தீயைக் கட்டுப்படுத்த 100 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 850 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதும் பாரியளவிலான சொத்துக்களுக்களை மீட்க முடியாமல் போயிருந்தது.

இதேவேளை வெப்ப சூழலால் குறித்த பகுதியில் வசித்தோருக்கு அப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நிலைமை ஓரளவு சீராகியுள்ளதாகவும் துப்பரவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

YouTube தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு…

wpengine

பிரபல ஹொட்டலில் திடீர் தீ விபத்து- 18 பேர் உயிரிழப்பு

wpengine

பிக்பென் கடிகாரம் நான்கு ஆண்டுகள் இயங்காது..

wpengine