உள்நாட்டு செய்திகள்

பேசாலை கடற் பரப்பில் 323 கிலோ கிராம் புகையிலை மீட்பு…



(FASTNEWS-COLOMBO) மன்னார் – பேசாலை கடற் பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, கைவிடப்பட்ட நிலையில் இருந்த 323.4 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த புகையிலை 10 பொதியாக மீட்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் இருந்து கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த புகையிலை பொதி மேலதிக விசாரணைக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts

சோபித தேரரின் மரணம் குறித்து வைத்தியர்களை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு.

wpengine

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் – அனுர

wpengine

கொழும்பு கண் நோய் மருத்துவமனை பொதுமக்களிடம் கோரிக்கை..

wpengine