உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

OIC விபத்தில் மஹிந்தானந்தவின் மகன் உள்ளிட்ட 07 பேருக்கு பிணை…



(FASTNEWS | COLOMBO) – பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உள்ளிட்ட 07 பேரை இன்று (25) பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் இசுறு நெத்திகுமார உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன் டிபென்டர் வாகனத்தை செலுத்திய ஓட்டுனரை மார்ச் மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உட்பட ஏழு பேர் இரண்டு 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாசிக்குடா கடற்கரைக்கு செல்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்..!

wpengine

´ரவி ஹங்ஸி´ சிக்கியது

wpengine

தலைவர் பதவியில் இருந்து ஏ.பி.டி.வில்லியர்ஸ் விலகல்..

wpengine