உலக செய்திகள்

சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் இந்தியா விஜயம்…



சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் நாளை(19) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெல்லி செல்லும் அவர் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசவுள்ளதாகவும், குறித்த சந்திப்பின் போது பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இளவரசரின் இந்திய வருகையால் இந்தியா சவுதி இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் என்று இந்தியாவுக்கான சவுதி தூதர் சவுத் பின் முகமது அல் சதி தெரிவித்துள்ளார்.

மேலும், மிகவும் முக்கியமான, மதிப்பு மிக்க நண்பராக இந்தியாவை சவுதி அரேபியா பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

டோரியன் சூறாவளி – ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்வு (photos)

wpengine

மலேசியாவின் முன்னாள் பிரதமரின் மனைவி கைது…

wpengine

அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பியா பிரதமர் தேர்வு

wpengine