உள்நாட்டு செய்திகள்

இன்று(14) விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுப்பு…



கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இன்று(14) மற்றும் நாளை(15) ஆகிய தினங்களில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

முப்படையினர், பொலிஸார் உடன் சுகாதார அமைச்சின் 700ற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள், பொது இடங்கள் மற்றும் மதவழிபாட்டுத் தலங்களில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் குறிப்பிடுகின்றார்.

Related posts

சாமர சம்பத் எம்.பி கைது

Azeem Kilabdeen

தனியார் வகுப்பு ஆசிரியர்களுக்கு “Teaching License” வழங்குமாறு பரிந்துரை..!

wpengine

தனியார் துறையினருக்கு ஆதரவாக வாசுதேவ நாணயக்கார

wpengine